ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வு அறையில் இந்திய வீரர்களின் பெயர்கள்... வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரின் ஓய்வு அறையில் உள்ள பலகையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறையில் இந்திய வீரர்களின் பெயர்கள்
ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறையில் இந்திய வீரர்களின் பெயர்கள்Twitter

ஆஸ்திரேலிய நாட்டில் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களின் ஓய்வு அறையில் இருக்கும் பலகையில், உலகளவில் சிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் நியூசிலாந்து அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனியல் வெட்டோரி, வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜாவின் பெயரும் அந்த பலகையில் உள்ளது.

இதுபோக அஸ்வின், அக்சர் படேலின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயிற்சி எடுப்பது தொடர்பாக, சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் பெயர்களை எழுதி ஆஸ்திரேலிய வீரர்கள் விவாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com