“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் அபாயகரமான வீரர்கள்” - ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்

“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் அபாயகரமான வீரர்கள்” - ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்
“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் அபாயகரமான வீரர்கள்” - ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்

“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் அபாயகரமான வீரர்கள்” என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1 - 0  என முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் அபாயகரமான வீரர்கள். வாய்ப்பு கொடுத்தால் ஆட்டத்தையே தங்கள் பக்கமாக திருப்பும் வல்லமை கொண்டவர்கள் என சொல்லியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

“இந்திய அணியை குறைத்து  எடை போட்டுவிட முடியாது. அனுபவ வீரர்கள் இல்லை என அப்படி செய்வதே தப்பு கணக்காக அமையலாம். ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்புகின்ற வல்லமை படைத்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். இரண்டாவது டெஸ்டில் பெரிய மாற்றத்துடன் அந்த அணி களம் இறங்கும். குறிப்பாக கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் மாதிரியான வீரர்கள் கிரீஸில் நிலைத்து நின்று விட்டால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விடும்” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் மாதிரியான வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கோலி மற்றும் ஷமி இந்த தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com