விளையாட்டு
சர்வதேச குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் மேலும் 3 இந்திய வீரர்கள்
சர்வதேச குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் மேலும் 3 இந்திய வீரர்கள்
செக்குடியரசில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீரர்கள் மேலும் மூன்று பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள மனோஜ் குமார், அரையிறுதியில் செக் குடியரசு வீரர் கிறிஸ்டியன் சோலின்ஸ்கியை தோற்கடித்தார். 81 கிலோ எடைப்பிரிவில் மணீஷ் பன்வார் அரையிறுதியில் செக்குடியரசு வீரர் காமில் க்ளாடியை தோற்கடித்தார். 91 கிலோ எடைப்பிரிவில் சதீஷ் குமார் அரையிறுதியில் செக்குடியரசு வீரர் ஆடம் கோலோரிக்கை தோற்கடித்தார். ஷிவ தாபா, கவுரவ் பிதூரி ஆகியோர் பிற பிரிவுகளில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.