\
கடும் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்: முதல் இடத்தை பிடிக்க தீவிரம்

கடும் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்: முதல் இடத்தை பிடிக்க தீவிரம்

கடும் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்: முதல் இடத்தை பிடிக்க தீவிரம்
Published on

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறுகிறது. 

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தபின், 3 ஒரு நாள் போட்டிகளில் அடுத்து விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சாஹேல், அக்‌ஷர் படேல், ஹர்திக், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, இலங்கை அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com