\
Ashwin new england coach
Ashwin new england coachBazball era

மெக்கல்லம் இடத்தில் அஸ்வின்... இங்கிலாந்தை கட்டி ஆள்வாரா தமிழன்? முழு விவரம் உள்ளே!

இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளருக்கான பரிசீலனையில் இந்திய வீரர் அஸ்வின் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on
Summary

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு Bazball புரட்சியை கொண்டு வந்த பிரெண்டன் மெக்கல்லம் பதவி விலகிய நிலையில், அவரது இடத்தை நிரப்ப இந்தியாவின் முன்னாள் ஸ்பின் நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிசீலனையில் இருப்பதாக தகவல். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகள், ஆழமான கிரிக்கெட் அறிவு, அமெரிக்காவில் நடந்த ரகசிய சந்திப்புகள் என அஸ்வின் பெயர் இங்கிலாந்து ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) மற்றும் மெக்கல்லம் ஆகியோர் இணைந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் அதிரடி ரன் குவிப்பு முறையை டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகப்படுத்தினர்.

அதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு 3 ரன்கள் வந்தாலே பெரிய விஷயமாக கருதப்பட்ட நிலையில், இந்த கூட்டணி கொண்டுவந்த Bazball என்ற அதிரடி முறையால் இங்கிலாந்து அணி ஓவருக்கு சராசரியாக 6 முதல் 10 ரன்கள் வரை குவித்து அதிரடி ஆட்டம் ஆடியது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியாக கருதப்பட்ட நிலையில், தொடக்கத்தில் இந்த முறையில் இங்கிலாந்து அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றது.

ஆனால் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகள் பாரம்பரிய டெஸ்ட் முறையில் ஆடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியதால் இங்கிலாந்தின் Bazball என்ற அதிரடி முறைக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் இந்த Bazball முறையை ரசித்தாலும், இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் விலகுவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான பரிசீலனையில் இந்திய வீரர் அஸ்வினும் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சில இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் பணி குறித்து சில காலமாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அப்பதவிக்கு வரவேண்டி அமெரிக்காவில் சில சந்திப்புகள் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் கடந்த டிசம்பர் 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அஸ்வின் தனது பந்துவீச்சை தாண்டி கிரிக்கெட் அறிவுத்திறனுக்காக உலக அளவில் புகழ் பெற்றவர் ஆவார். இதன் காரணமாகவே அஸ்வின் இதற்கு முன்னர் எந்த பெரிய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சி அளிக்காமல் இருந்தாலும், அவரை பயிற்சியாளராக்கும் முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Ashwin new england coach
’MS தோனி to ராகுல் டிராவிட்..’ அடுத்த சிஎஸ்கே பயிற்சியாளராக வாய்ப்புள்ள 5 பேர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com