கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
Published on

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி வந்த நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியில் நெட் பவுலராக இடம்பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி அசத்தினார் நடராஜன். அவரது வெற்றியை தங்களது வெற்றியாகவே எண்ணி கொண்டாடினர் தமிழக மக்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆறு மாத காலத்திற்கு பிறகு சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய நடராஜனுக்கு அவரது ஊரை சேர்ந்த மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக நடராஜன் அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com