டோக்கியோ ஒலிம்பிக் 2020 : இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடல் வெளியீடு
டோக்கியோ ஒலிம்பிக் 2020 : இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடல் வெளியீடு

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த நிகழ்வில் விளையாட்டு அமைச்சக செயலாளர் ரவி மிட்டல், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா, பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையகத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான் மற்றும் இதர உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தீம் பாடலை பிரபல பின்னணி பாடகர் மோகித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். அவரது மனைவி பிராத்தனா கஹிலோட் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவளித்து, ஊக்கமளிக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும்.‌ அதனை நிறைவேற்றும் முயற்சியாக இந்த தீம் பாடல் வெளியீடு அமைந்துள்ளது. 

இந்த எழுச்சியூட்டும் பாடல், உயரிய அரங்கில் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒவ்வொரு வீரரின் கனவை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் பற்றிய வினாடி வினா, செல்ஃபி புள்ளிகள், விவாதங்கள் வாயிலாக #Cheer4India என்ற பிரச்சார இயக்கத்தை விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள், நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்காகத் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்த உள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த இயக்கத்தில் ஒவ்வொரு இந்தியரும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் துரூவ் பாத்ரா பேசுகையில், இந்த தீம் பாடல், ஊக்கமளிக்கும் பாடல் மட்டுமல்ல என்றும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு பின்னணியில் உள்ள 1.4 பில்லியன் மக்களின் ஒன்றிணைந்த பிரார்த்தனையாகவும் இது விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com