டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் - விமர்சித்தது காரணமா?

டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் - விமர்சித்தது காரணமா?
டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் -  விமர்சித்தது காரணமா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் தடகள விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளராக செயல்பட்டவர் உவே ஹோன் (Uwe Hohn). 59 வயதான அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கம், ஈட்டி எறிதல் பிரிவிலிருந்து கிடைத்திருந்தது. அதை வென்றவர் நீரஜ் சோப்ரா. அவருக்கு பயிற்சி கொடுத்தவர் தான் உவே ஹோன்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த அவர் நீரஜ் சோப்ரா ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்றதும் அவரது பயிற்சியின் கீழ் தான். இந்த நிலையில் தான் அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். 

“ஈட்டி எறிதல் பயிற்சியாளரை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். விரைவில் இரண்டு பயிற்சியாளர்களை கொண்டு வர உள்ளோம். அதனால் உவே ஹோனை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கிறோம். அவரது செயல்பாடுகள் சரியில்லை” என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வீரர்களும் அதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் Klaus Bartonietz தொடர்ந்து பணியாற்றுவார் என தெரிவித்துள்ளது. பயோ-மெக்கானிக்கல் வல்லுனரான இவர் நீரஜுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நீரஜ், க்ளாஸ் பார்டோனிட்ஸ் (Klaus Bartonietz) பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்றார். இருந்தாலும் உவே ஹோன் பயிற்சியின் கீழ் இரண்டு தங்கம் வென்றதால் அவருக்கு கிரெடிட் கொடுத்திருந்தாராம். 

உவே ஹோன் பயிற்சியை காட்டிலும் எனக்கு க்ளாஸ் பார்டோனிட்ஸ் உடன் பயிற்சி மேற்கொள்வது பொருத்தமானதாக உள்ளது” என தங்கம் வென்றதும் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூன் மாதம் உவே ஹோன் “இந்த மக்களுடன் பணியாற்றுவது மிகவும் கடினம்” என சொல்லி இந்தியா ஒலிம்பிக்கிற்கு தயாரானதையும் விமர்சித்திருந்தார். தற்போது பதவியை இழந்துள்ளார். 

“நான் முதலில் இங்கு வந்த போது. என்னால் ஏதேனும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நம்பினேன். ஆனால் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய தடகள கூட்டமைப்பில் உள்ள மக்களுடன் பணியாற்றுவது மிகவும் கடினம். அது அவர்களின் அலட்சிய போக்கா அல்லது அறியாமையா என எனக்கு தெரியவில்லை. வீரர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து சார்ந்த சப்ளிமெண்ட் கூட இங்கே கிடப்பதில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர் என எதிர்பார்க்கப் பட்டவர்களுக்கும் இது தான் இங்கு நிலை. அது சரியாக கிடைத்தால் சந்தோஷம். 

கடந்த ஏப்ரலில் எனது பணி சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு பேமெண்ட் கிடைக்காது என பிளாக்மெயில் செய்ததால் அதை அப்போது செய்திருந்தோம். அப்போது எங்களது ஊதியத்தை உயர்த்தி கொடுப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். ஆனால், இறுதி வரை அது வெறும் வார்த்தையாக மட்டுமே இருந்தது. செயலில் எதுவும் இல்லை” என இந்திய எக்ஸ்பிரஸுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார் உவே ஹோன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com