\
சிட்னி டெஸ்டில் நடராஜன் களம் இறங்க வாய்ப்பு!

சிட்னி டெஸ்டில் நடராஜன் களம் இறங்க வாய்ப்பு!

சிட்னி டெஸ்டில் நடராஜன் களம் இறங்க வாய்ப்பு!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு  போட்டியில்  வென்று 1 - 1 என்ற சமயநிலையில் தொடர் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய போது காயம்பட்ட வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சிட்னியில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காயம் காரணமாக உமேஷ் விளையாடாமல் பெஞ்சில் இருந்தால் அவருக்கு மாற்றாக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிசிசிஐயிலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய நடராஜனே தேர்வுக்குழுவின் தேர்வாக இருப்பதாகவும் தெரிகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு எப்படி ஸ்டார்க் உதவுகிறாரோ அதுபோல நடராஜன் சிட்னி டெஸ்டில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இணையருக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சைனி மற்றும் ஷர்துல் தாக்கூரும் இந்திய அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நன்றி : TIMES OF INDIA

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com