மார்ச் மாதத்தின் சிறந்த வீரர்... புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்தது ஐசிசி!

மார்ச் மாதத்தின் சிறந்த வீரர்... புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்தது ஐசிசி!

மார்ச் மாதத்தின் சிறந்த வீரர்... புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்தது ஐசிசி!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்க தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி. மாதம் தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிக்கும் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கவுரப்படுத்தி வருகிறது ஐசிசி. இதில் இங்கிலாந்து தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் இந்த விருது அவருக்கு கொடுக்கபட்டுள்ளது. அவருடன் போட்டியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸும் இடம் பிடித்திருந்தனர். 

மகளிர் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் Lizelle Lee மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் அஷ்வினும், ஜனவரி மாதம் ரிஷப் பண்டும் சிறந்த ஐசிசி வீரருக்கான விருதுகளை வென்றிருந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com