‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ கங்குலியின் ஃபீலிங்ஸ்!

‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ கங்குலியின் ஃபீலிங்ஸ்!
‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ கங்குலியின் ஃபீலிங்ஸ்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி, தான் அடித்த முதல் டெஸ்ட் சதத்தை விட சிறந்த நினைவு வேறில்லை இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை ஸ்டார் வீரர்கள் வந்தாலும், ‘தாதா’ என்ற பெயருக்கு தனி கெத்து உண்டு. அந்த கெத்துக்கு உரிய நபர் தான் ‘கங்குலி’. இவருக்கு ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா இளவரசர்’ உள்ளிட்ட வேறு சில பெயர்களும் உண்டு. 

சச்சின் டெண்டுல்கர் புகழின் உச்சத்தில் இருந்த அதே காலக்கட்டத்தில் தான், கங்குலி சாம்ராஜ்யமும் இருந்தது. சச்சினுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்ததைப் போல, கங்குலிக்கும் ஒரு தீவிர ரசிகர் கூட்டமே இருந்தது. தற்போதும் இருவருக்கும் அந்தக் கூட்டம் உள்ளது. 

1996ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சவுரவ் கங்குலி, சவாலான இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டு அந்தப் போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றிலேயே ஒரு அறிமுக வீரர் குவித்த அதிகபட்ச ரன் இதுதான். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து தான் யார் என்பதை நிரூபித்தார் ‘தாதா’ கங்குலி. 

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் தனது அலுவலகத்தில் உள்ள டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த கங்குலி, தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியை கண்டுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக டிவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், தான் டெஸ்ட் போட்டியில் அடித்த முதல் சதத்தை விட சிறந்த நினைவுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com