க்ருணால் பாண்ட்யாவை அடுத்து சஹால், கிருஷ்ணப்ப கவுதமுக்கு கொரோனா தொற்று

க்ருணால் பாண்ட்யாவை அடுத்து சஹால், கிருஷ்ணப்ப கவுதமுக்கு கொரோனா தொற்று
க்ருணால் பாண்ட்யாவை அடுத்து சஹால், கிருஷ்ணப்ப கவுதமுக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களான சஹால் மற்றும் கிருஷ்ணப்ப கவுதமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்தியாவும், டி20 தொடரை இலங்கையும் வென்றது. இந்த டி20 தொடரின் 2 ஆவது போட்டிக்கு முன்பாக இந்திய ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போட்டி மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இந்தியா 5 பேட்ஸ்மேன்கள், 6 புவலர்களுடன் விளையாடி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்ப இருந்தனர். மேலும் க்ருணால் பாண்ட்யா மட்டும் தனிமைக்காலம் முடியும் வரை இலங்கையில் இருப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான சஹாலுக்கும், கிருஷ்ணப்ப கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com