கிரிக்கெட் வீரர் பாண்ட்யா திருமணம்: காதலியை மணந்தார்

கிரிக்கெட் வீரர் பாண்ட்யா திருமணம்: காதலியை மணந்தார்

கிரிக்கெட் வீரர் பாண்ட்யா திருமணம்: காதலியை மணந்தார்
Published on

கிரிக்கெட் வீர்ர் ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணனும் மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான குணால் பாண்ட்யா திருமணம் மும்பையில் நேற்று நடந்தது.

இந்த ஆண்டு, கிரிக்கெட் வீரர்களுக்கு திருமண வருடமாக அமைந்திருக்கிறது. புவனேஷ்வர் குமார் தனது தோழி நுபுர் நாகரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்தார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தனது காதலி, சகாரிகா காட்கேவை அதே மாதத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி- அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து குணால் பாண்ட்யா - பன்குரி ஷர்மா திருமணம் நேற்று நடந்துள்ளது. 

குணால் பாண்ட்யாவும் பன்குரி ஷர்மா என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் அமிதாப்பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா செல்லும் முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com