இந்திய வீரர்களுக்கு ரூ 50 லட்சம்: பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

இந்திய வீரர்களுக்கு ரூ 50 லட்சம்: பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு
இந்திய வீரர்களுக்கு ரூ 50 லட்சம்: பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியமும் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளது. ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதை பொருத்து இந்த தொகை வழங்கப்படும். நான்கு போட்டிகளிலும் விளையாடிய வீரருக்கு ரூ 50 லட்சம் கிடைக்கும். தலைமை பயிற்சியாளர் அனில் கும்ளேக்கு ரூ.25 லட்சமும் துணை பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தையும் பிடித்ததற்கு வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com