விளையாட்டு
ராவணன், சீதையை சிறை வைத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் டீம்!
ராவணன், சீதையை சிறை வைத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் டீம்!
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் 2 டெஸ்டுகளில் வென்ற இந்திய அணி, நாளை 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இதையடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தவிர மற்றவர்கள் நுவரேலியாவில் உள்ள சீதா அம்மன் கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். உமேஷ் யாதவ் தனது மனைவியுடன் சென்றிருந்தார்.
கண்டியில் கிரிக்கெட் பயிற்சியில் இருந்த அவர்கள், அங்கிருந்து இந்த கோயிலுக்குச் சென்றுள்ளனர். இது ராவணன், சீதையை சிறை வைத்திருந்த அசோகவனம் என்று கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள பாறைகளில் வட்ட அழுத்தங்கள் உள்ளன. இது ராவணனுடைய யானையின் கால் தடம் என்று கூறப்படுகிறது.