‘பத்திரிகையாளரிடமிருந்து பெற்றது இதுதான்’ -சாஹாவுக்கு ஆதரவாக திரண்ட கிரிக்கெட் வீரர்கள்

‘பத்திரிகையாளரிடமிருந்து பெற்றது இதுதான்’ -சாஹாவுக்கு ஆதரவாக திரண்ட கிரிக்கெட் வீரர்கள்
‘பத்திரிகையாளரிடமிருந்து பெற்றது இதுதான்’ -சாஹாவுக்கு ஆதரவாக திரண்ட கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாஹா, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 37 வயதான அவர் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சாஹா. 

“இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் அளித்த பங்களிப்புக்கு பிறகு மாண்புமிகு பத்திரிகையாளர் ஒருவரிடமிருந்து நான் பெற்றது இதுதான்” என ட்வீட் செய்திருந்தார் சாஹா. இந்த நிலையில் அவரது ட்வீட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் ரியாக்ட் செய்துள்ளனர். 

 

“பத்திரிகையாளர் சாஹாவை அச்சுறுத்திய விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் இதில் தலையிட வேண்டிய நேரம் வந்துள்ளது” என சொல்லியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

 

“சாஹா சந்தித்த அச்சுறுத்தலை எண்ணி வருந்துகிறேன். எனக்கு தெரிந்து அவர் மாண்புமிகு பத்திரிகையாளராக இருக்க வாய்ப்பில்லை” என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். அவரது பெயரை பகிரங்கமாக வெளியில் சொல்லுமாறு ஆகாஷ் சோப்ரா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com