கொரோனா தொற்றால் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தர் - புது வீரர் சேர்ப்பு

கொரோனா தொற்றால் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தர் - புது வீரர் சேர்ப்பு
கொரோனா தொற்றால் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தர் - புது வீரர் சேர்ப்பு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கொரோனா தொற்று காரணமாக தொடரிலிருந்து வெளியேறி உள்ளார். அவருக்கு மாற்றாக அணியில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு இதனை அறிவித்துள்ளது. 

பெங்களூருவில் பயிற்சி முகாமிலிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெயந்த் யாதவ் தென்னாப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடும் அணியுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போல வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பேக்-அப் வீரராக நவ்தீப் சைனி ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிராஜ், தசைபிடிப்பு காரணமாக தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 19-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். 

 

இந்திய ஒருநாள் அணி விவரம்... 

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com