“எனக்கு அறுவை சிகிச்சை முடிந்தது.. வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி!” - நடராஜன் ட்வீட்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜனுக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை நல்லபடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய அவர் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். அறுவை சிகிச்சை தான் அவரது காயத்திற்கு தீர்வு என மருத்துவர்கள் சொல்லிய காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “இன்று எனக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கவனத்துடன் மிக கனிவாக பழகி எனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. பிசிசிஐ-க்கு எனது நன்றிகள். நான் பூரண குணம் பெற வேண்டி எண்ணை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி” என நடராஜன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். கூடிய விரைவில் பழையபடி உங்களை களத்தில் காண காத்திருக்கிறோம் என பிசிசிஐ நடராஜானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.