விளையாட்டு
“நீங்களும் உங்களது சூப்பர் பவரை விரைவில் பெறுங்கள்“- தடுப்பூசி செலுத்திய பின் சுப்மன் கில்
“நீங்களும் உங்களது சூப்பர் பவரை விரைவில் பெறுங்கள்“- தடுப்பூசி செலுத்திய பின் சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
“நீங்களும் உங்களது சூப்பர் பவரை விரைவில் பெறுங்கள். மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் முயற்சிகளுக்கு சல்யூட்” என தெரிவித்துள்ளார் அவர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் தனது தடுப்பு மருந்துக்கான முதல் டோஸை பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்துக்கு வரும் ஜூன் 2 அன்று பயணிக்க உள்ள இந்திய அணியில் கில்லும் இடம் பெற்றுள்ளார். கோலி, ரஹானே, தவான் மாதிரியான இந்திய கிரிக்கெட் வீரர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.