\
பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்; இந்திய வீரரை அறிவித்தது ஐசிசி

பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்; இந்திய வீரரை அறிவித்தது ஐசிசி

பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்; இந்திய வீரரை அறிவித்தது ஐசிசி
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர் தனது அபார திறனை அண்மை காலமாக வெளிப்படுத்தி வருகிறார். அதன் மூலம் இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் வென்றுள்ளார். இதனை ஐசிசி அறிவித்துள்ளது. 

அவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 80 மற்றும் 25 ரன்களை எடுத்திருந்தார். அதோடு இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 57*, 74* மற்றும் 73* என தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசியிருந்தார். அதன் மூலம் இந்த விருதை வென்றுள்ளார். 

இந்த விருதுக்கான பரிந்துரையிலிருந்த அமீரக வீரர் அரவிந்த் மற்றும் நேபாள வீரர் தீபேந்திரா சிங் ஆகியோரை முந்தியுள்ளார் ஷ்ரேயஸ். மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் அமெலியா கெர் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com