"சதம் விளாசுவேன்னு நெனக்கவேயில்ல; எல்லாம் அணி வைத்த நம்பிக்கைதான்” - ‘தொடர்நாயகன்’ அஸ்வின்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஒரு சதமும் விளாசியிருந்தார் அஸ்வின். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் அவர்.
“இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி கொடுக்கிறது. இந்த பயணம் நீண்ட நெடியது. பல அணிகளை வென்றதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அணி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கையை நான் 100 சதவிகிதம் பூர்த்தி செய்துள்ளதாக உணர்கிறேன்.

? Highest wicket-taker
? Top five run-getter
?️ Three fifers
? One hundred

Another masterful series for R Ashwin and he is the man of the series ? #INDvENG pic.twitter.com/hMSbIDtqcf
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 6, 2021

அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை எனக்கான பலமாக அமைந்தது. சென்னை டெஸ்டில் சதம் விளாசுவேன் என எண்ணவில்லை. அந்த ரன்கள் என் கெரியரின் சிறந்த இன்னிங்ஸில் ஒன்று.
இளம் வீரர் ரிஷப் பண்ட் இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக அபரிமிதமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் மிகச்சிறந்த வீரர். அண்ணா என என்னை பண்ட் அழைப்பார். அறிமுக தொடரிலேயே அசத்தலாக விளையாடிய அக்சர் பட்டேலின் ஆட்டமும் அற்புதம்” என சொல்லியுள்ளார் அஸ்வின்.