சக்சஸ் ரகசியம் சொல்லும் ரவிச்சந்திரன் அஷ்வின்..!

சக்சஸ் ரகசியம் சொல்லும் ரவிச்சந்திரன் அஷ்வின்..!

சக்சஸ் ரகசியம் சொல்லும் ரவிச்சந்திரன் அஷ்வின்..!
Published on

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் தமிழன் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இன்று பிறந்த நாள். 

1986-இல் இதே நாளில் சென்னையில் பிறந்தார் அவர்.

பேட்ஸ்ட்மேன்களுக்கு பஞ்சமில்லாத இந்திய கிரிக்கெட் அணியில் தனது அபாரமான பந்து வீச்சு திறன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்பவர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த போட்டிகளில் மின்னல் வேகத்தில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் தலைசிறந்த பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என கிரிக்கெட் உலகின் பெரும்பாலான 'வின்'களை தன் பக்கம் வைத்துள்ளவர் அஷ்வின். சமயங்களில் பேட்டிங்கிலும் அசத்துவார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக பந்து வீசியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றவர். 

தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஷ்வின் நாளை மறுநாள் துபாயில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 

அவரது சக்சஸ் ரகசியம்...

“எப்போதுமே பல பேர் நம்மை பார்க்கிறார்கள் என்ற ஆர்வத்தில் ஒருபோதும் நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. சர்வதேச போட்டிகள் துவங்கி உள்ளூர் போட்டிகள் வரை நான் எங்கு கிரிக்கெட் விளையாடினாலும் அதை ஆழமாக ரசித்து விளையாடுகிறேன். 

டிவிஷனல் லெவல் கிரிக்கெட்டில் நான் விளையாடினால் கூட அதே கேம் ஸ்பிரிட்டோடு தான் ஆட்டத்தை ரசித்து விளையாடுவேன். ஏனென்றால் காலம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயத்தை கொண்டவன் நான். 

இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தீவிர பயிற்சி செய்து கொண்டே இருப்பேன். 

எனக்கான வாய்ப்பும், அழைப்பும் வரும் போது என் திறனை வெளிக்காட்டுவேன். இது தான் என் ஸ்டைல். 

பெரிய இடங்களுக்கு சென்றாலும் புது புது விஷயங்களை முயற்சித்து கொண்டே இருந்தால் தான் தொடர்ந்து சக்சஸ் பெற முடியும். அதே வேளையில் தோல்விகளை தழுவும் போதும் மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் விளையாட்டானாலும் சரி, வாழ்க்கையானாலும் சரி நாம் நம்மை வளர்த்துக் கொள்ள தயராக இருந்தால் தான் வளர முடியும்” என ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com