விளையாட்டு
“ரஜினியிடம் ஒரு ஈர்ப்பை உணர்ந்தேன்” - மகிழ்ச்சியில் ஹேமங் பதானி
“ரஜினியிடம் ஒரு ஈர்ப்பை உணர்ந்தேன்” - மகிழ்ச்சியில் ஹேமங் பதானி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, நடிகர் ரஜினி காந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானி ரஜினி காந்தின் தீவிர ரசிகர். இவர் தன்னுடைய ட்விட்டரில், “ரஜினியிடம் அந்த ஈர்ப்பு தன்மையை உணர்ந்தேன். அவரிடம் ஏதோ சிறப்பு உள்ளது. அவரைப் பார்க்கும் போது அந்த வியப்பு இருந்தது. ரஜினிகாந்த் உடனான அந்த இரண்டு நிமிடங்கள், என் வாழ்வில் சந்தோஷமான தருணங்கள். ரசிகனின் அந்தத் தருணம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
என்னுடைய அறைக்கு நான் அப்போது திரும்பிக் கொண்டிருந்தேன். லிப்ட் கதவு திறந்த உடன் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் லிப்ட் உள்ளே இருந்தார். அவர் எளிமையான மனிதர் என்பதை பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதனை நேரடியாக பார்த்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.