“நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”-ஐந்து மாத மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்ட்யா!

“நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”-ஐந்து மாத மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்ட்யா!

“நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”-ஐந்து மாத மகனின் பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்ட்யா!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது ஐந்து மாத மகன் அகஸ்தியாவின் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது அவரது இணையர் நட்டாஷாவும் உடன் இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடந்த ஜூலை 30-ஆம் தேதி மகன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போதிலிருந்தே சமூக வலைத்தளத்தில் தனது மகனின் படங்களை அவ்வபோது பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹர்திக். இந்நிலையில் அவரது மகன் பிறந்து நேற்றோடு 5 மாதங்கள் நிறைவடைந்தது. அதை கொண்டாடும் விதமாக மகனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார் ஹர்திக்.

அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு “என் பையன் பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. நானும், நட்டாஷாவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என கேப்ஷன் போட்டுள்ளார். அந்த போஸ்டை பல லட்சம் பேர் லைக்  போட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com