தோழியை மணந்தார் வருண் சக்கரவர்த்தி; எளிய முறையில் திருமணம்!

தோழியை மணந்தார் வருண் சக்கரவர்த்தி; எளிய முறையில் திருமணம்!
தோழியை மணந்தார் வருண் சக்கரவர்த்தி; எளிய முறையில் திருமணம்!

தனது நீண்ட கால தோழியை மணந்தார் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற எளிமையான முறையில் நடந்த திருமண புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் உள்ள பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்து இருந்தார்.

அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் காயத்தினால் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகினார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி அவரை நேரிலும் சந்தித்து இருந்தார். 

இந்நிலையில், தொழில் முறை கிரிக்கெட்டில் சாதித்த அவர் தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். தனது நீண்ட நாள் தோழியை சென்னையில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வில் திருமணம் செய்துகொண்டார் வருண். தற்போது அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

View this post on Instagram

A post shared by Weinviite (@vlove_weinviite)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com