“இன்று நாங்கள் நாளை வேறொரு அணி, இதற்கு ஒரு தீர்வு வேண்டும்”-சாப்ட் சிக்னல் குறித்து கோலி

“இன்று நாங்கள் நாளை வேறொரு அணி, இதற்கு ஒரு தீர்வு வேண்டும்”-சாப்ட் சிக்னல் குறித்து கோலி
“இன்று நாங்கள் நாளை வேறொரு அணி, இதற்கு ஒரு தீர்வு வேண்டும்”-சாப்ட் சிக்னல் குறித்து கோலி

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கள அம்பயரின் தவறான முடிவால் ‘அவுட்’ என அறிவிக்கப்பட்டார். அது தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை இது தொடர்பாக தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆட்டத்திற்கு பிறகான போஸ்ட் மேட்ச் பிரசென்டேஷனின் போது கோலி “அம்பயரின் ஒரே ஒரு தவறான முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். அதனால் இதற்கு ஒரு தீர்வு வேண்டும். விதிகளை எளிமையாக்க வேண்டும். இன்று பாதிக்கப்பட்டது எங்கள் அணி. நாளை வேறொரு அணி பாதிக்கப்படலாம். அதுவும் மிகமுக்கியமான போட்டிகளில் இந்த தவறான முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதே மாதிரியான ஒரு சம்பவம் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் நடந்தது. அந்த தொடரில் ரஹானே பிடித்த கேட்ச் ஒன்று தொடர்பான முடிவை அறிவிக்க கள அம்பயர் மூன்றாவது அம்பயரின் உதவியை நாடி இருப்பார். ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை” என கோலி தெரிவித்திருந்தார். 

சாப்ட் சிக்னல்?

கிரிக்கெட்டில் நெருக்கடியான முடிவுகளை கள அம்பயர்கள் எடுக்கும் போது அதை சாப்ட் சிக்னல் என சொல்வது வழக்கம். உதாரணமாக ரன் அவுட் தொடர்பான முடிவுகள், குளோஸ் கேட்ச் குறித்த முடிவுகளை எடுக்கும் போது அம்பயர்கள் தங்கள் உள்ளுணர்வு சொல்லும்படி அவுட் அல்லது நாட் அவுட் என அறிவிப்பர். சமயங்களில் டிவி அம்பயரின் பரிசீலனைக்கும் அம்பயர்கள் செல்வதுண்டு. அதே தான் சூர்யகுமார் யாதவ் விவாகரத்திலும் நடைபெற்றுள்ளது. 

இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் முதல்முறையாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இந்நிலையில் தான் ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பைன் லெக் திசையில் ரேம்ப் ஆட முயல, அவர் அடித்த பந்து பீல்டர் டேவிட் மாலனின் கைகளில் தஞ்சம் அடைந்திருக்கும். அதனை அவுட் என சொல்லியிருப்பார் அம்பயர். டிவி அம்பயரின் ரீபிளேயில் பந்து பாதிக்கும் மேல் தரையில் பட்டது போல இருந்தது. இருந்தாலும் கள அம்பயரின் முடிவில் டிவி அம்பயர் குறுக்கிட முடியாததால் சூர்யகுமார் அவுட் என்பது உறுதியானது. அது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com