விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி வெளியீடு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி வெளியீடு
சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு புது ஜெர்ஸி வழங்குவது தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பெரும்பாலும் நீல நிறம் சார்ந்த ஜெர்ஸி இந்திய அணிக்கு தயார் செய்யப்படும். இந்நிலையில் இந்த முறை இந்திய அணிக்கு ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்புறம் மட்டும் நீலம் கலந்தும், பின்புறத்தில் பெயர் மற்றும் எண் நீல நிறத்திலும் பதிக்கப்படும். இந்த ஜெர்ஸி தொடர்பாக ஏற்கனவே விளக்கமளித்துள்ள பிசிசிஐ, இந்தியாவின் தேசியக் கொடியில் இருக்கும் ஆரஞ்சு நிறத்தை மையப்படுத்தி புதிய ஜெர்ஸி தயாரிக்கப்பட்டதாக கூறியிருந்தது.