சர்வதேச டி20 கிரிக்கெட்: 2016-க்கு பிறகு இந்திய அணி நிகழ்த்திய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்: 2016-க்கு பிறகு இந்திய அணி நிகழ்த்திய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்: 2016-க்கு பிறகு இந்திய அணி நிகழ்த்திய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் பெற்றுள்ளது.

2016-க்கு பிறகு இந்திய அணி முதல்முறையாக டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

அதோடு இந்தியா கடைசியாக விளையாடிய 9 டி20 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேபோல நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணிகளை ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. 

ரோகித், இஷான் கிஷன், கோலி, பண்ட், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல் என பல வீரர்கள் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். 

இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com