வருணுக்கு பதில் அஸ்வின் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முதல் பேட்டிங்

வருணுக்கு பதில் அஸ்வின் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முதல் பேட்டிங்

வருணுக்கு பதில் அஸ்வின் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முதல் பேட்டிங்
Published on

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் களம் காண்கின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணி இதில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும். அந்த அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றிக் கோட்டுக்கு அருகே சென்று தோல்வியை தழுவி இருந்தது. 

இந்தியா, தனது முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியை தழுவியிருந்தது. இந்திய அணி வருண் சக்ரவர்த்திக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், இஷாத் கிஷனுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் உள்ளே வந்துள்ளார்.

ஆடும் லெவன் விவரம்...

ஆப்கானிஸ்தான்!

ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷாஜாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கேப்டன்), குல்பதின் நைப், ஷராபுதீன் அஷ்ரஃப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹசன்.

இந்தியா!

கே.எல். ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com