“உலகளவில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிதான் அபாயகரமானது” - இன்சமாம்

“உலகளவில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிதான் அபாயகரமானது” - இன்சமாம்
“உலகளவில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிதான் அபாயகரமானது” - இன்சமாம்

இந்திய கிரிக்கெட் அணி 2021 டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிறு அன்று சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இன்சமாம் இதனை தெரிவித்துள்ளார். 

“எந்தவொரு தொடரிலும் இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என சொல்ல முடியாது. இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் குறித்து சொல்லலாம். எனது பார்வையில் இந்த முறை மற்ற அணிகளை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வீரர்களுக்கு அமீரக சூழலும் அதற்கு கைகொடுக்கலாம். டி20 கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ள அணியாகவும் இந்தியா உள்ளது. 

பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கூட ரன்களை சேஸ் செய்ய அவர்களுக்கு தேவைப்படவில்லை. 

இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோதி விளையாட உள்ள இந்த சூப்பர் 12 போட்டியை ஃபைனலுக்கு முந்தைய ஃபைனல் என சொல்லலாம்” என தெரிவித்துள்ளார் இன்சமாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com