விளையாட்டு
’’சுகாதார பணியாளர்களுக்கு நன்றி’’ - தடுப்பூசி செலுத்திய போட்டோவுடன் நடராஜன் ட்வீட்
’’சுகாதார பணியாளர்களுக்கு நன்றி’’ - தடுப்பூசி செலுத்திய போட்டோவுடன் நடராஜன் ட்வீட்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடராஜன். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என அரசு விழிப்புணர்வு கொடுத்து வருகிறது.
“இன்று காலை நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். மக்களுக்கு தங்கள் உயிரை பற்றி கூட கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி. எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடராஜன்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நடராஜன் விரைவில் இந்திய அணிக்காக ஆக்ஷனில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.