IND vs SA: இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

IND vs SA: இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

IND vs SA: இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Published on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. 

“இந்த விக்கெட் மிகவும் ஸ்லோவாக உள்ளது. மிடில் ஓவர்களில் முறையான பார்ட்னர்ஷிப் எங்களுக்கு அமையவில்லை. அதனை கடந்த போட்டியில் நாங்கள் கற்ற பாடமாக பார்க்கிறேன். இன்று நாங்கள் சிறந்த ஆட்டத்தை கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து நாங்கள் பேசியுள்ளோம். பேட்ஸ்மேன்களும் அதனை அறிந்துள்ளார்கள். கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவனுடன் களம் காண்கிறோம்” என கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். 

ஆடும் லெவன் விவரம்!

இந்தியா: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

தென்னாப்பிரிக்கா: டி காக் (விக்கெட் கீப்பர்), மலான், டெம்பா பவுமா (கேப்டன்), மார்க்ரம், வான்டர் டஸன், டேவிட் மில்லர், பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி, சிசண்டா மகலா, ஷம்சி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com