பேட்டிங்கில் கெத்து காட்டிய ஷமி - பும்ரா இணையர் : மிரண்டு போன இங்கிலாந்து பவுலர்கள்

பேட்டிங்கில் கெத்து காட்டிய ஷமி - பும்ரா இணையர் : மிரண்டு போன இங்கிலாந்து பவுலர்கள்
பேட்டிங்கில் கெத்து காட்டிய ஷமி - பும்ரா இணையர் : மிரண்டு  போன இங்கிலாந்து பவுலர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான பவுலர்களான முகமது ஷமியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் இக்கட்டான நிலையில் அணிக்கு தங்களது பேட்டிங்கின் மூலம் பங்களிப்பு கொடுத்துள்ளனர். இருவரும் இணைந்து 77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இதன் மூலம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா அழுத்தத்தை இங்கிலாந்து பக்கமாக திருப்பி விட்டுள்ளது. 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்று ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. பண்ட் மற்றும் இஷாந்த் களத்தில் இருந்தனர். பண்ட் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப இங்கிலாந்து இந்திய அணியின் டெயில் என்டர்களை விரைந்து அவுட் செய்யும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதை முறியடித்துள்ளனர் ஷமியும், பும்ராவும். 

அவர்களது பார்ட்னர்ஷிப்பை தகர்க்க இங்கிலாந்து கேப்டன் ரூட்டும் தனது பவுலிங் ஆப்ஷன்களை பயன்படுத்தி பார்த்தும், அது பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் கோலி சொன்னதும் நினைவுக்கு வந்தது. “எங்களது பவுலர்களும் வலை பயிற்சியின் போது பேட்டிங் பயிற்சி செய்து வருகின்றனர்” என சொல்லி இருந்தார். 

இவர்களது இருவரது ஆட்டமும் இந்தியாவை ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்த உதவியுள்ளது. ஷமி சிக்ஸர் விளாசி அரை சதம் பதிவு செய்தது பார்ப்பதற்கு ஆக்ஷன் சினிமாவை போலவே இருந்தது. உணவு நேர இடைவேளையின் போது இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்களை எடுத்திருந்தது. ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இரண்டு செஷன் மீதம் உள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com