விளையாட்டு
கபில்தேவை பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனைத்த கிரிக்கெட் பிரபலங்கள்!
கபில்தேவை பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனைத்த கிரிக்கெட் பிரபலங்கள்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டருமான கபில் தேவ் இன்று அவரது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1983-இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்குள் பல மாற்றங்களை நிகழ்த்திய கபில், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 9031 ரன்களும், 687 விக்கெட்டுகளை கபில் தேவ் வீழ்த்தியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி பல கிரிக்கெட் பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சச்சின், கோலி, ஹர்ஷா போக்லே, யுவராஜ் சிங், ஐசிசி, பிசிசிஐ-யும் வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த பதிவுகள் இங்கே…