கேப் டவுனில் அரங்கத்தில் குவிந்த கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்
நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்த அவர்களின் மனைவிகள் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்திருந்தனர்.
கேப் டவுனில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களம் இறங்கியது. போட்டி துவக்கத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்பு நிலையாக ஆடி டிவில்லியர்ஸ் அணிக்கு 67 ரன்களை சேர்த்தார். அதன் பின்பு ஆடிய மற்ற வீரர்களின் கடின ஆட்டத்தால் அந்த அணி 285 ரன்களை எடுத்தது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸிசை துவக்கிய இந்திய அணி அடுத்தடுத்தாக 3 விக்கெட்டுகளை இழந்தது. இதில் நட்சத்திர வீரர்களான கேப்டன் விராத் கோலி, முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை நேரில் காண்பதற்காக விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, ஷிகர் தவான் மனைவி ஆயிஷா முகர்ஜி, ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, புவனேஸ் குமார் மனைவி நுபுர் நகர் ஆகியோர் வந்திருந்தனர். அரங்கத்தில் அமர்ந்துக் கொண்டு இவர்கள் அனைவரும் தங்கள் கணவர்களின் ஆட்டத்தை பார்க்கும் ஃபோட்டோ வெளியாகி உள்ளது. இதில், தங்கள் கணவர்களின் ரன்களை கண்டு அவர்கள் தரும் ரியாக்ஷன்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் போட்டி துவங்கியுள்ளது.