‘மில்லியன் டாலர் பிளேயர்’ - பாபர் அசாமை புகழ்ந்த அஷ்வின்

‘மில்லியன் டாலர் பிளேயர்’ - பாபர் அசாமை புகழ்ந்த அஷ்வின்
‘மில்லியன் டாலர் பிளேயர்’  - பாபர் அசாமை புகழ்ந்த அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் களத்தில் மிகவும் ஆக்டிவான பிளேயர். சமயங்களில் களத்திற்கு வெளியேயும் அனுபவ வீரர்கள் மற்றும் முத்திரை படைத்து வரும் வீரர்களுடன் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடுவது அஷ்வினின் வாடிக்கை. 

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அது போல யூடியூப் சேனல் மூலமாக அஷ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹாக்குடன் பேசியுள்ளார் அஷ்வின். 

‘DRS with Ash’ எபிசோட் மூலம் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான இன்சமாம் கிரிக்கெட் உலகிற்கு எப்படி அறிமுகமானார் என்பதில் ஆரம்பித்து பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசியுள்ளார். 

“பாபர் அசாம் ஒரு மில்லியன் டாலர் பிளேயர் போல தெரிகிறார். ஆஸ்திரேலியாவில் சதம் விளாசியுள்ளார். அயலக மண்ணிலும் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நம் கண்களுக்கு அவர் விருந்து படைக்கிறார். அவரது ஆட்டத்தை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என பாபரை புகழ்ந்து அஷ்வின் கேள்வி கேட்டிருப்பார்.

அதற்கு இன்சமாமும் “பாபர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது உச்சத்தை எட்டவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் அதை எட்டியதும் நிச்சயம் மேலும் சிறப்பாக விளையாடி பாபர் அசத்துவார்” என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com