சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டார் கோலி!

சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டார் கோலி!

சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டார் கோலி!
Published on

இந்திய அணியின் சக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து விராட் கோலி இந்தியா புறப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டி வரும் 26-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் அணியிலிருந்து விலகி இந்தியாவுக்கு விமானம் பிடித்தார் கேப்டன் கோலி.

“நம்பிக்கையை இழக்காதீர்கள். அதுவே உங்களை பாசிட்டிவாக செயல்பட வைக்கும்” என கோலி சக இந்திய வீரர்களிடம் சொல்லியதாக தெரிகிறது. ரஹானே அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்த உள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணியினருடன் மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்காக இணைய உள்ளார். தற்போது ரோகித் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com