‘சாந்தமாக இருந்துக்கொண்டே ஆக்ரோஷ ஆட்டம்‘-பாக்சிங் டே டெஸ்ட்டின் ஆட்ட நாயகன் கேப்டன் ரஹானே!

‘சாந்தமாக இருந்துக்கொண்டே ஆக்ரோஷ ஆட்டம்‘-பாக்சிங் டே டெஸ்ட்டின் ஆட்ட நாயகன் கேப்டன் ரஹானே!
‘சாந்தமாக இருந்துக்கொண்டே ஆக்ரோஷ ஆட்டம்‘-பாக்சிங் டே டெஸ்ட்டின் ஆட்ட நாயகன் கேப்டன் ரஹானே!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரஹானே.

அடிலெய்டில் தோல்வி, கேப்டன் கோலி இல்லை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லை என்பது மாதிரியான நெருக்கடியான நிலையில், “இந்தியா இந்தத் தொடரில் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சொல்லி வந்தபோதும் அசராமல் அணியை திறம்பட வழிநடத்தியதோடு, தனிப்பட்ட முறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் ரஹானே.

நல்ல வேளையாக ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதனால் இந்தியாவின் பந்துவீச்சில் இருந்து தனது வியூகங்களை அப்ளை செய்ய தொடங்கினார் கேப்டன் ரஹானே. எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து சாந்தமாக இருந்த படியே ஆக்ரோஷ ஆட்டத்தை  வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் மற்றும் புஜாரா சொதப்பிய போதும் அதை எண்ணி அச்சப்படாமல் உலகத்தரமான ஆஸ்திரேலிய பந்து வீச்சை ஒரு கை பார்த்தார். அவருக்கு விஹாரி, பண்ட் மற்றும் ஜடேஜா உதவினர். அதன் விளைவாக அவர் சதம் விளாசியதோடு இந்தியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவிக்கவும் உதவினார்.

தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஸ்மித், லபுஷேன் மாதிரியான பேட்ஸ்மேன்களு ரஹானே போட்ட ஸ்கெட்ச் வேற லெவல். அதனால் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களில் சுருண்டது. 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய போதும் மயங்க் மற்றும் புஜாரா சொதப்பியதால் கில்லுடன் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரஹானே. அதோடு 40 பந்துகளில் 27 ரன்களை எடுத்திருந்தார். அதன் பலனாக இந்தியாவுக்கு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. கவாஸ்கர், வார்ன் மாதிரியான ஜாம்பவான்கள் ரஹானேவின் ஆட்டத்தை புகழவும் இதுவே காரணம்.   

நன்றி : பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com