மகளிர் உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி: பதக்கங்களை குவித்த வீராங்கனைகள்
மகளிர் உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.
மகளிர் உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடைப்பெற்றது. இதன் இறுதிப்போட்டி ஆட்டங்கள் நேற்று நடைப்பெற்றது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற நீத்து, கஜகஸ்தானின் ஸாஸிராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற ஜோதி குலியா ரஷிய வீராங்கனை மோல்கனோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
54 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சாக்ஷி சவுத்ரி, 57 கிலோ எடைப்பிரிவில் சசி சோப்ரா, 64 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அன்குஷிதா போரோ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். அதேபோல, 81 கிலோவுக்கு மேற்பட்டவர்களுக்கான எடைப்பிரிவில் பங்கேற்ற நேஹா யாதவ், 81 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அனுபமா ஆகியோர் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.