\
இந்தியா அபார பந்துவீச்சு: வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு

இந்தியா அபார பந்துவீச்சு: வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு

இந்தியா அபார பந்துவீச்சு: வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு
Published on

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 2 ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, நியூசிலாந்து 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 இருபது ஓவர் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட்
போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 ஆவது இருபது ஓவர் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்கியது.

ஆக்லாந்து ஈடன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்தில்லும் மன்ரோவும் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை முதலில் அதிரடியாக விளையாடினர். ஆனால், அதன் பின்பு இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் மார்டின் குப்தில் 33 ரன்களிலும், மன்ரோ 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கிராண்ட் ஹோமும், வில்லியம்சனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ராஸ் டெய்லரும், செய்ப்ஃரட் ஆகியோர் நிதானமாக விளையாடினர், ஆனால் விரைவாக அவர்களால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இறுதியில் ராஸ் டெய்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். செய்ப்ஃரட் 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com