"இது கொரோனா காலம்..எச்சிலைப் போட்டு பந்தை தேய்ப்பதை குறைக்கவும்": புவனேஷ்வர் குமார்

"இது கொரோனா காலம்..எச்சிலைப் போட்டு பந்தை தேய்ப்பதை குறைக்கவும்": புவனேஷ்வர் குமார்

"இது கொரோனா காலம்..எச்சிலைப் போட்டு பந்தை தேய்ப்பதை குறைக்கவும்": புவனேஷ்வர் குமார்
Published on

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பந்துவீச்சாளர்கள் எச்சிலைக் கொண்டு பந்தை தேய்த்து பளபளப்பாக்குவதை முடிந்தளவுக்கு குறைக்கவும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் மூவாயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்படலாம் என்ற பேச்சும் எழாமல் இல்லை.

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் நாளை இமாச்சலப் பிரதேசே மாநிலம் தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், கொரோனாவை பற்றியும் பேசியுள்ளார். "கொரோனா வைரஸ் காரணமாக பந்தில் எச்சில் துப்பாதீர்கள், அப்படி துப்புவதை இந்திய வீரர்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். ஆனால் காலம் காலமாக பந்துவீச்சாளர்கள் பந்தை பளிச்சென்றாக்க எச்சில்த் துப்பி அதனை தேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதேபோன்றதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தென் ஆப்ரிக்காவின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரும் பேசியுள்ளார், அவர் " தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது பெருமளவுக்கு ஒருத்தருக்கு ஒருவர் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்" என அறிவறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு விளையாட்டு போட்டிகள் வரை வந்துள்ளது. பல போட்டிகளை கொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்தியாவிலும் சில போட்டிகள் ரத்தாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com