காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகினார் கே.எல்.ராகுல்
இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், காயம் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், காயம் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆறு இன்னிங்ஸில் இரண்டு முறை அவர் அரை சதம் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாத அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்த பொது கைமூட்டு பகுதியில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் தொடரிலிருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ராகுலுக்கு முன்னதாக உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விளையாடாமல் விலகியது குறிப்பிடத்தக்கது. சிட்னி மைதானத்தில் இருபதாயிரம் பார்வையாளர்களை அனுமதிக்கவும் உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.