சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: அமெரிக்காவில் இந்திய விளையாட்டு வீரர் கைது
சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 24 வயது காஷ்மீர் ‘ஸ்னோ ஷூ’ விளையாட்டு வீரர் தன்வீர் ஹுசைன் அமெரிக்கப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் வங்கி ஊழியரான தன்வீர் ஹுசைன் நியூயார்க்கில் உள்ள சரநாக் ஏரி கிராமத்திற்கு உலக ஸ்னோ ஷூ சாம்பியன்ஷிபில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு 13 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
“தன்வீர் ஹுசைன் பாலியல் அத்துமீறலுக்காகவும் சிறுமியின் வாழ்க்கைக்கு அபாயகரமாகத் திகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சிறுமியை கட்டாயப்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை”என அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பேசிய இந்திய ஸ்னோ ஷூ கூட்டமைப்பின் தலைவர் கான், ஹுசைனுக்கு அந்த பெண் 18 வயதிற்கு உட்பட்டவர் என்று தெரியாது எனவும் ஆங்கிலம் சரியாக புரியாது எனவும் கூறினார்.
ஹூசைன் 8 கிலோமீட்டர் ஸ்னோ ஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் 114-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.