இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் 134 பந்துகளில் அஷ்வின் சதம் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் பதிவு செய்துள்ள 5வது சதம் இது.
கடைசியாக கடந்த 2016இல் அஷ்வின் சதம் விளாசியிருந்தார். இதற்கு முன்னர் அஷ்வின் விளாசிய நான்கு சதமும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்தவை. இங்கிலாந்து அணிக்கு எதிராக அஷ்வின் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
அஷ்வின் கேப்டன் கோலியுடன் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் . முன்னதாக அஷ்வின் பழைய பாணியில் கிரிக்கெட் விளையாடினால் சென்னை மைதானத்தின் ஆடுகளத்தில் ரன் சேர்க்கலாம் என சொல்லியிருந்தார். அதை அவரே தனது ஆட்டத்தின் மூலம் செய்துள்ளார்.