\
சென்னை டெஸ்ட் : சொந்த ஊரில் அஷ்வின் அரை சதம்

சென்னை டெஸ்ட் : சொந்த ஊரில் அஷ்வின் அரை சதம்

சென்னை டெஸ்ட் : சொந்த ஊரில் அஷ்வின் அரை சதம்
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் அரை சதம் விளாசியுள்ளார்.

அஷ்வின் களத்தில் பேட் செய்ய இறங்கிய போது 106 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாறி வந்தது. கேப்டன் கோலியுடன் சேர்ந்து நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தார் அஷ்வின்.

அதன் பலனாக 64 பந்துகளில் அரை சதம் கடந்தார் அஷ்வின். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் ஸ்கோர் செய்துள்ள பன்னிரெண்டாவது அரை சதமாகும். கடைசியாக கடந்த 2017இல் இலங்கை அணிக்கு எதிராக அஷ்வின் அரை சதம் அடித்திருந்தார். அதே போல சென்னையில் 2016 வாக்கில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அரை சதம் கடந்திருந்தார். 

சொந்த ஊரில் அஷ்வின் அரை சதம் கடந்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com