அறிமுக போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த குருணால் பாண்ட்யா: புதிய சாதனை!

அறிமுக போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த குருணால் பாண்ட்யா: புதிய சாதனை!

அறிமுக போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த குருணால் பாண்ட்யா: புதிய சாதனை!
Published on

தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரை சதம் பதிவு செய்து இந்திய கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யா புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் வெறும் 26 பந்துகளில் அரை சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

இக்கட்டான சூழலில் களத்திற்கு வந்த குருணால், ராகுலுடன் பேட்டிங்கில் வலுவான கூட்டணி அமைத்து இந்தியா 317 ரன்கள் குவிக்க உதவினார். ‘இந்த இன்னிங்ஸை அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என குருணால் ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்துள்ளார். 

ஆல் ரவுண்டரான அவர் பவுலிங்கிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போது தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com