ஆஸ்திரேலியா அணியுடனான தொடரைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 3-0 என்ற விகிதத்தில் வெற்றி பெற்று, இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 120 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 119 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா இரண்டாம் இடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3ஆம் இடத்திலும் உள்ளன. சர்வதேச டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது.