விளையாட்டு
டாஸ் வென்றது இந்தியா : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்
டாஸ் வென்றது இந்தியா : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பாமாகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமானது.
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், கலீல் அகமது, கேதார் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.