வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் 
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


மேன்செஸ்ட்டர்‌ நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்ப்ரீஸ் மற்றும் அல்லன் சேர்க்கப்பட்டுள்ளனர். புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இடம் பெறவில்லை. 

விராட்‌ கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 4 போட்டி‌களில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 

இரு அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 126 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி ‌‌59 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 62 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com