முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் !

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் !

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் !
Published on

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்தப் போட்டியில் அறிமுக வீரர் ப்ரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார். மேலும், வேகப் பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இன்றையப் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கிரேக் பிராத்வைட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20  போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.    

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல் பேட்டிங்கில் அசத்துகின்றனர். இங்கிலாந்து தொடரில் சொதப்பினாலும் சொந்த மண்ணில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா வும் சுழலில் மிரட்டுவார்கள்.இந்தப் போட்டியில் அறிமுக வீரராக மும்பையை சேர்ந்த பிருத்வி ஷா களமிறங்குகிறார். 18 வயதான இவர், 293 வது டெஸ்ட் வீரராக களமிறங் குகிறார். அவர் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com